ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன்: கோலி

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 08:45 am

ஒரு கட்டத்தில் பிளேஆஃப் வாய்ப்பை இழந்து விட்டோம் என்று நினைத்ததாக நேற்றைய போட்டிக்கு பின் விராட் கோலி கூறினார். 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 88 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி மற்றும் பார்த்திவ் பட்டேல் 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடித்து வெற்றி பெற்றனர். கோலி 48 ரன்களும், பார்ததிவ் பட்டேல் 40 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 

வெற்றிக்கு பின் பேசிய விராட் கோலி, ''கடந்த ஒரு வாரமாக பைத்தியம் பிடித்தது போல் இருந்தோம். ஒரு கட்டத்தில், நாங்கள் பிளேஃஆப் வாய்ப்பை இழந்து விட்டோம் என்று தான் நினைத்தேன். ஆனால் மற்ற அணிகள் விளையாடிய போட்டிகளால் ஏற்பட்ட மாற்றத்தினால் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் போதும். ரன் ரேட்டும் நன்றாக தான் உள்ளது. இன்று எங்கள் அணியின் ஆட்டம் சிறப்பானதாக இருந்தது. குறை என்று கூற எதுவும் இல்லை. மிக சரியான ஆட்டம் இது. பஞ்சாப் பேட்டிங்கின் போது நாங்கள் தொடர்ந்து விக்கெட் எடுத்துக்கொண்டே இருந்தோம். அது மிக பெரிய பலமாக இருந்தது. டாஸ் வெல்வது மிக முக்கியமான ஒன்று என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close