ஐ.பி.எல்: கம்பிரை முறியடித்த கோலி; 500-ரிலும் சாதனை படைத்தார்!

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 01:37 pm


ஐ.பி.எல்-ல் கேப்டனாக அதிக ரன் அடித்த பட்டியலில் கவுதம் கம்பிரை முறியடித்தார் விராட் கோலி. 

நேற்றைய லீக் போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாபை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 48 ரன் அடித்தார். ஐ.பி.எல்-ல் தற்போது கேப்டனாக விராட் 3525 ரன் வைத்துள்ளார். 

அதிக ரன் அடித்த கேப்டன் பட்டியலில் எம்.எஸ். தோனி (3683 ரன்) முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருந்த கம்பிரை (3518 ரன்), கோலி 3ம் இடத்துக்கு தள்ளினார். மும்பை கேப்டன் ரோஹித் சர்மா (2269 ரன்) நான்காவது, ஹைதராபாத் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் (2099 ரன்) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், ஐ.பி.எல் வரலாற்றில் ஐந்து முறை 500 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். 12 போட்டிகளில் கோலி 514 ரன்கள் அடித்துள்ளார். 


ஐ.பி.எல்-ல் கோலி 500-ரன்னுக்கு மேல் அடித்த விவரம்:-

2011- 557 ரன் (16 போட்டி)

2013- 634 ரன் (16 போட்டி)

2015- 505 ரன் (16 போட்டி)

2016- 973 ரன் (16 போட்டி)

2018- 514 ரன் (12* போட்டி)

டேவிட் வார்னர், ஐ.பி.எல்-ல் நான்கு முறை 500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். கிறிஸ் கெய்ல், கவுதம் கம்பிர், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மூன்று முறை 500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கின்றனர். ஷிகர் தவான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இரண்டு முறையும், ரோஹித் சர்மா மற்றும் ராபின் உத்தப்பா ஒரு முறையும் இந்த இலக்கை எட்டியிருக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல்-ல் விராட் கோலி 147 போட்டிகளில் 4767 ரன் அடித்து, சுரேஷ் ரெய்னாவை (158 போட்டிகளில் 4544 ரன்) முந்தியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close