வன்முறை வழக்கு: குற்றவாளியான முன்னாள் வீரர் சித்துவுக்கு ரூ.1000 அபராதம்

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 03:31 pm


முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, சாலை வன்முறை வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

1988ம் ஆண்டு 65 வயது முதியவருடன் பாட்டியாலா சாலையில் சித்து வன்முறையில் ஈடுபட்டார். சித்து தாக்கப்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் சித்துவுக்கு 2006ல் மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சித்துவுக்கான சிறைத் தண்டனையை ரத்து செய்து, ஜாமீன் வழங்கியது. 

இந்த வழக்கில் தற்போது சித்து குற்றவாளி என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவருக்கு ரூ.1000 அபராதமாக விதித்துள்ளது. சித்து மீது பதியப்பட்ட வழக்கின் தண்டனையாக, ஒரு வருடம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தரலாம். இதில் நீதிமன்றம் அபராதத்தை விதித்துள்ளது. இதனால் 30 ஆண்டுகால வழக்கு முடிவுக்கு வந்தது. 

ஒருநாள் போட்டிகளில் 500 ரன்கள் மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சித்து, பஞ்சாப் அரசின் சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close