பெண்கள் ஐ.பி.எல்: கேப்டன்களாக ஹர்மான்ப்ரீத், மந்தனா அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 11:11 am


பெண்கள் டி20 சேலஞ் போட்டிக்கு ஹர்மான் ப்ரீத், மந்தனா கேப்டன்களாக இருப்பார்கள் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. 

ஐ.பி.எல் போட்டியின் முதல் தகுதிச் சுற்று வருகிற 22ம் தேதி நடக்கிறது. இதற்கு பிறகு, கண்காட்சிக்காக பெண்கள் ஐ.பி.எல் போட்டியை நடத்த உள்ளது பி.சி.சி.ஐ. இந்திய மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்கும். போட்டியில் பங்கேற்கும் இரண்டு அணிகளில், தலா நான்கு வெளிநாட்டு வீராங்கனைகள் இடம் பெறுவார்கள். 

நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ், சோஃபி டேவின்; ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி, அலிஸ்ஸா ஹீலி, மேகன் ஸ்சுட், பெத் மூனே; இங்கிலாந்தின் டானி வய்ட், டேனியல் ஹஸில் ஆகிய வெளிநாட்டு வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க இருப்பதாக ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் ஷுக்லா தெரிவித்தார். இந்த இரண்டு அணிகளுக்கும் கேப்டன்களாக   ஹர்மான் ப்ரீத் மற்றும் மந்தனா ஆகியோர் இருப்பர்.

இன்னும் 3 ஆண்டுகளில் பெண்கள் ஐ.பி.எல் போட்டியை நடைமுறைப்படுத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close