அறிமுக டெஸ்ட் போட்டி: பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது அயர்லாந்து

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 11:30 am


வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது அயர்லாந்து. 

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்த்தை வழங்கியது. இதையடுத்து அயர்லாந்து பாகிஸ்தானுடன், ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதில், பாகிஸ்தான் - அயர்லாந்து பங்கேற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, கடந்த 11ம் தேதி டப்லினில் தொடங்கியது. 

டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான், 9 விக்கெட் இழந்து 310 ரன் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து 130 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் ஃபாலோ பெற்று விளையாடிய அயர்லாந்து 339 ரன் எடுத்த சமயம், அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அறிமுக டெஸ்ட் போட்டியில், அயர்லாந்தின் கெவின் ஓ'பிரியன் (118 ரன்) தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 

160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைக் கொண்டு, இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியில் அறிமுகமான முன்னாள் வீரர் இன்சமாம் உல்-ஹக்கின் உறவினர் இமாம் உல்-ஹக், 74 ரன் அடித்தார். முடிவில் அயர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close