மூன்றுவித தொடர்களில் பங்கேற்க வெ. இ. செல்கிறது வங்கதேசம்

Last Modified : 16 May, 2018 11:58 am


வங்கதேசத்துக்கு எதிரான மூன்றுவித கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது வெஸ்ட் இண்டீஸ். 

வங்கதேச அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. வருகிற ஜூலை மாதம் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. இங்கு வங்கதேசம் பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டியாகும். இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடக்கும். அங்கு வங்கதேசம், 14 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன், ஆப்கானிஸ்தானுடன் வங்கதேச அணி டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் போட்டி அட்டவணை:-

ஜூலை 4-8: முதல் டெஸ்ட், ஆன்டிகுவா

ஜூலை 12-16: இரண்டாம் டெஸ்ட், ஜமைக்கா

ஜூலை 22: முதல் ஒருநாள், கயானா

ஜூலை 25: இரண்டாம் ஒருநாள், கயானா

ஜூலை 28: மூன்றாம் ஒருநாள், கிட்ஸ்

ஜூலை 31: முதல் டி20, கிட்ஸ்

ஆகஸ்ட் 4: இரண்டாம்  டி20, ஃபுளோரிடா

ஆகஸ்ட் 5: மூன்றாம் டி20, ஃபுளோரிடா

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close