ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி: இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெற்றி

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 05:30 pm


ஆசிய சாம்பியனஸ் ஹாக்கி போட்டியில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்திய பெண்கள் அணி.

தென் கொரியாவின் டோங்கே நகரில் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா - சீனா அணிகள் மோதின. இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா. 

இந்திய தரப்பில் வந்தனா கட்டாரியா 2 கோலும், குர்ஜித் கவுர் ஒரு கோலும் அடித்தனர். ஆசிய போட்டியில் இந்திய அணிக்கு  கிடைத்த இரண்டாவது வெற்றி இதுவாகும். துவக்க போட்டியில் இந்தியா, ஜப்பானை 4-1 என வென்றிருந்தது. நாளை (17ம் தேதி) நடக்கும் போட்டியில் இந்தியா- மலேசியாவை எதிர்கொள்ள இருக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close