போட்டிக்கு பின் டி-ஷர்ட்டை மாற்றிக்கொண்ட பாண்ட்யா, ராகுல்

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 10:00 am

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்திற்கு பிறகு பாண்ட்யாவும், ராகுலும் தங்களது அணி ஜெர்ஸியை மாற்றிக்கொண்டனர். 

ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தப்பி பிழைத்தது. 

இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 94 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவரது அணி தோல்வியடைந்தது. 

இதனிடையே போட்டிக்கு பின் ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் உரையாடிக்கொண்டு இருந்தனர். பின்னர் தாங்கள் அணிந்திருந்த தங்கள் அணியின் டி-ஷர்ட்டை இருவரும் மாற்றிக்கொண்டனர்.  மரியாதை நிமித்தமாக கால்பந்து போட்டிகளில் இதுபோன்று வீரர்கள் தங்களது அணி ஜெர்ஸியை மாற்றிக்கொள்வது வழக்கம். ஆனால் கிரிக்கெட் வீரர்கள் இது போன்று செய்ததில்லை. இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான பாண்டியாவும், ராகுலும் நேற்று இவ்வாறு செய்தது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றது. 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close