ஐ.பி.எல்: ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் கே.எல். ராகுல்

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 10:52 am


ஐ.பி.எல்-ல் அதிக ரன் அடித்து மீண்டும் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் கே.எல். ராகுல். 

11-வது ஐ.பி.எல் போட்டியில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் பிளே-ஆஃப் சுற்றை நெருங்க கடுமையாக போராடியது. முடிவில் மும்பை அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பஞ்சாப் வெற்றியை தக்கவைத்துக் கொள்ளாவிட்டாலும், அந்த அணியின் துவக்க வீரர் ராகுல் மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 60 பந்துகள் சந்தித்த அவர் 94 ரன்கள் அடித்தார். இதனால் ஐ.பி.எல்-ல் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிஷாப் பன்ட்டை பின்னுக்கு தள்ளி, மீண்டும் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் ராகுல்.  


மேலும் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் ஆண்ட்ரியூ டியே 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதனால் அவர் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காததால், ஹர்திக் பாண்டியா இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். 

அதிக ரன் அடித்த வீரர்கள்:-

வீரர்கள்போட்டிரன்சராசரிஸ்ட்ரைக் ரேட்
கே.எல். ராகுல்
13652
59.27
161
ரிஷாப் பன்ட்
12582
52.9
179.6
ஜோஸ் பட்லர்13548
54.8
155.2
கேன் வில்லியம்சன்12544
60.44
135
அம்பதி ராயுடு12535
54.8
152.9

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:-

வீரர்கள்
போட்டி
விக்கெட்எக்கனாமி ரேட்
ஆண்ட்ரியூ டியே
13247.71
ஹர்திக் பாண்டியா
12188.92
உமேஷ் யாதவ்12178.01
சுனில் நரேன்13157.77
ட்ரென்ட் பௌல்ட12159.24


பஞ்சாபுக்கு எதிரான வெற்றியின் மூலம் மும்பை புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. 

அணிபோட்டிவெற்றிதோல்விபுள்ளிநெட்-ரன்ரேட்
ஹைதராபாத்1293180.4
சென்னை1284160.383
கொல்கத்தா136614-0.96
மும்பை1367120.384
ராஜஸ்தான்136712-0.399
பஞ்சாப்136712-0.49
பெங்களூரு1257100.218
டெல்லி12396-0.478


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close