மல்யுத்த முகாம்: பிரபல 'போகாட்' சகோதரிகள் நீக்கம்

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 11:52 am


மல்யுத்த போட்டிக்கான தேசிய முகாமில் இருந்து பிரபல போகாட் சகோதரிகள் நீக்கப்பட்டுள்ளனர். 

'தங்கல்' படத்தின் மூலம் மிகுந்த பிரபலமடைந்தவர்கள் போகாட் சகோதரிகள். கீதா, பபிதா, ரித்து மற்றும் சங்கீதா ஆகிய நான்கு போகாட் சகோதரிகள் மீது மல்யுத்த சம்மேளனம் ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் தேசிய முகாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆசியட் ட்ரயல் போட்டியில் இவர்கள் பங்கேற்க முடியாது. ஆசியட் ட்ரயல், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதம், இந்தோனேசியாவில் நடக்க இருக்கும் ஜகர்தா பலேம்பாங் போட்டிக்கான தேர்வுக்காக நடைபெறும் போட்டியாகும். 

முன்னதாக லக்னோவில் நடைபெற்ற தேசிய முகாமை புறக்கணித்ததற்காக கீதா மற்றும் பபிதா மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போகாட் சகோதரிகள் நான்கு பேருக்கும், மல்யுத்த சம்மேளனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்களை தவிர சாக்ஷி மாலிக் கணவர் சத்யவார்த் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் உள்பட 15 மல்யுத்த வீரர்-வீராங்கனைகளும் தேசிய முகாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள் விவரம்:- ரித்து போகாட் (50 கிலோ), இந்து சவுத்ரி(50 கிலோ), சங்கீதா போகாட் (57 கிலோ), கீதா போகாட் (59 கிலோ), ரவிதா (59 கிலோ), பூஜா தோமர் (62 கிலோ), மனு (62 கிலோ),நந்தினி சலோகே (62 கிலோ), ரேஷ்மா மானே (62 கிலோ), அஞ்சு (65 கிலோ), மனு தோமர் (72 கிலோ), காமினி (72 கிலோ), பபிதா போகாட் (53 கிலோ), ஷ்ரவன் (61 கிலோ), சத்யவார்த் கடியேன் (97 கிலோ).

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close