ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இறுதிச் சுற்றில் இந்திய அணி

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 03:48 pm


ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இந்திய பெண்கள் அணி. 

தென் கொரியாவின் டோங்கேவில் பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. 

இந்திய அணி சார்பில் குர்ஜித் கவுர் (17-வது நிமிடம்), வந்தனா கட்டாரியா (33-வது நிமிடம்), லால்ரேம்சியாமி (40-வது நிமிடம்) கோல் போட்டனர். இந்தியா தனது முதல் இரண்டு போட்டிகளில் ஜப்பான் (4-1) மற்றும் சீனாவை (3-1) தோற்கடித்திருந்தது. 

இந்த வெற்றியின் மூலம், 9 புள்ளிகள் பெற்று இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. வரும் 20ம் தேதி நடக்க இருக்கும் இறுதிச் சுற்று போட்டியில் இந்தியா, போட்டியை நடத்தும் நாடான கொரியாவை சந்திக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close