சாதாரண மனிதர்களால் இப்படி செய்யவே முடியாது: கோலி

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 10:21 am

சாதாரண மனிதர்களால் இது போன்று செய்யவே முடியாது என்று ஏ.பி.டி.வில்லியர்ஸ் பிடித்த கேட்ச் குறித்து கோலி கூறினார். 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை, 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

வெற்றிக்கு பின் பேசிய பெங்களூரு அணி கேப்டன் கோலி, ''இது போன்ற போட்டிகளை முன்பே நிறைய முறை பார்த்து விட்டேன். கடைசி கட்டத்தில் பதட்டம் அடையாமல் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தேன். விளையாட்டின் போது, பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். இதற்கு முன்பு மும்பைக்கு எதிராக விளையாடிய ஒரு போட்டி இதே போன்று தான் இருந்தது.

சிறப்பாக பந்துவீசிய பவுளர்ஸ்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து ராஜஸ்தான் உடன் விளையாடும் போட்டியில் இதே நம்பிக்கையுடன் செல்வோம். மொத்த அணியும் தற்போது நல்ல மனநிலையில் உள்ளோம். இக்கட்டான சூழ்நிலையில் ஒருவர் முன்வந்து சிறப்பாக விளையாடுவதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.

இன்று ஏ.பி.டி.வில்லியர்சும், மொயினும் சிறப்பாக விளையாடினர். நாங்கள் வெற்றி பெற கூடாது என்று எதிரணிகள்  நினைக்கின்றனர். அந்த இடத்தில் இருப்பது நல்ல விஷயம். 

இன்று ஏ.பி.டி பிடித்த கேட்ச் போன்று சாதாரண மனிதரால் பிடிக்க முடியாது. அது ஸ்பைடர் மேன் செய்யும் ஒன்று. அந்த பந்து சிக்சரை சென்றடையும் என்றே நினைத்தேன். ஆனால் அவர் குதித்து அந்த பந்தை சரியாக பிடித்துவிட்டார். இதுபோன்ற நம்ப முடியாதவற்றை அவர் எப்போதும் செய்வார். அதற்கெல்லாம் நான் பழகிவிட்டேன். அவர் பேட்டிங்கின் போது அடிக்கும் ஷாட்டுகள் என்னை இன்றும் மிரள வைக்கின்றன. 

இது தான் பெங்களூருவில் இந்தாண்டு நாங்கள் விளையாடும் கடைசி போட்டி. ரசிகர்களுக்கு நன்றி. அவர்களின் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close