இத்தாலி ஓபன்: காலிறுதிக்கு நடால், ஹாலேப் முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 01:08 pm


இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நடால், ஹாலேப் முன்னேற்றம்.

ரோம் நகரில் இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் பிரிவில், தரவரிசையில் 2ம் இடம் வகிக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸை  6-1, 7-5 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். 2018 சீசனில் ஜோகோவிச்சின் முதல் காலிறுதி சுற்று இதுவாகும். ஜோகோவிச், நான்கு முறை ரோம் சாம்பியன் பட்டத்தை வென்றவர். 

குரோவேஷியாவின் மரின் சிலிச், ஜப்பானின் கெய் நிஷிகோரி, ஜெர்மனின் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர். 

பெண்கள் ஒற்றையரில், நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் விலாவை எதிர்கொள்ள இருந்தார். ஆனால், காயம் காரணமாக மேடிசன் போட்டியின் பாதியில் விலகியதால், ஹாலேப் காலிறுதிக்குள் நுழைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

கரோலின் வோஸ்னியாக்கி, ஏஞ்சலிக் கெர்பர், மரியா ஷரபோவா, எலினா ஸ்விடோலினா, ஜெலீனா ஒஸ்டாபென்கோ உள்ளிட்டோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close