மோசமான சாதனையையும் முறியடித்த 'பலே' பசில் தம்பி!

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 01:31 pm


ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் பசில் தம்பி.

11-வது ஐ.பி.எல்-ல் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணியை, பெங்களூரு 14 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதல் இன்னிங்சில் பெங்களூரு அணிக்கு எதிராக பந்துவீசிய ஹைதராபாதின் வேகப்பந்து வீச்சாளர் பசில் தம்பி, ஒரு விக்கெட் கூட எடுக்காமல், 4 ஓவர்கள் வீசி 70 ரன்களை வாரி வழங்கினார். 

இதன் மூலம், ஐ.பி.எல் வரலாற்றில், அதிகபட்ச ரன்களை வழங்கிய இஷாந்த் சர்மாவின் மோசமான சாதனையை தம்பி முறியடித்தார். 2013ம் ஆண்டு சி.எஸ்.கே-வுக்கு எதிராக இஷாந்த், 4 ஓவர் வீசி 66 ரன்களை கொடுத்திருந்தார். அப்போது இஷாந்தும் ஹைதராபாத் அணியில் தான் இடம் பெற்றிருந்தார் என்பது சிறப்பம்சம்.

ஐ.பி.எல்-ல் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர்கள் விவரம்:-

வீரர்கள்ஓவர்விக்கெட்ரன்அணிஎதிரணிஆண்டு
பசில் தம்பி4070ஹைதராபாத்பெங்களூரு2018
இஷாந்த் சர்மா4066ஹைதராபாத்
சென்னை2013
உமேஷ் யாதவ்4065டெல்லிபெங்களூரு
2013
சந்தீப் சர்மா4165பஞ்சாப்ஹைதராபாத்
2014
வருண் ஆரோன்4263டெல்லி
சென்னை2012


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close