ஐ.பி.எல்: கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 03:33 pm


ஐ.பி.எல் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்.

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணியை, பெங்களூரு 14 ரன் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிக்காக கேப்டன் கேன் வில்லியம்சன் கடுமையாக போராடியது வீணாய் போனது. 42 பந்துகளில் வில்லியம்சன் 81 ரன்களை விளாசி இருந்தார். இந்த சீசனில் வில்லியம்சனின் 8-வது அரைசதமாக இது அமைந்தது. 

2012ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடி இருந்த கிறிஸ் கெய்ல் 8 அரைசதங்களை அடித்திருந்தார். தற்போது அவரது இடத்தை வில்லியம்சன் பகிர்ந்து கொண்டுள்ளார். இப்பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், டேவிட் வார்னர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 

ஐ.பி.எல் சீசன்களில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியல்:

ஆண்டுவீரர்கள்அணிஅரைசதம் (50+)சதம்
2008ஷான் மார்ஷ்பஞ்சாப்61
2009மேத்தியூ ஹேடன்சென்னை5
2009ஜே.பி. டுமினிமும்பை5
2010ஐகியூஸ் கல்லிஸ் பெங்களூரு6
2011சுப்ரமணியம் பத்ரிநாத்சென்னை5
2012கிறிஸ் கெய்ல்பெங்களூரு81
2015டேவிட் வார்னர்
ஹைதராபாத்
7
2016விராட்  கோலி
பெங்களூரு
114
2017டேவிட் வார்னர்
ஹைதராபாத்
41
2017ராபின் உத்தப்பாகொல்கத்தா5
2018கேன் வில்லியம்சன்ஹைதராபாத்
8


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close