டாஸ் முறையை ஒழிக்க ஐசிசி திட்டம்!

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 07:58 pm


கிரிக்கெட் போட்டிகளில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்வது, எந்த அணி பந்துவீசுவது என்பதை தீர்மானிக்கும் டாஸ் போடும் பழக்கத்தை கைவிட  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது.

1877-ம் ஆண்டு முதல்முறையாக இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த பழக்கம் தொடர்கிறது. டெஸ்ட் போட்டியில் முதலில் தொடங்கப்பட்ட டாஸ் போடும் வழக்கம் பின்னாளில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. நாணயத்தை சுண்டிவிட்டு பூவா, தலையா என்ற ஆப்ஷனை களத்தில் இறங்கும் அணிகள் தேர்வு செய்யும். இதுவே “டாஸ்”. டாஸ் வெற அணியின் தலைவரே பவுலிங்கா அல்லது பேட்டிங்கா என்பதை முடிவு செய்வார்.

இந்நிலையில் டாஸ் முறையை கைவிட பிசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. அண்மைக்காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், போட்டியை நடத்தும் நாடு, உள்ளூர் அணிக்கு ஏற்றவாறு மைதானத்தை மாற்றி அமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் போட்டி, போட்டியை நடத்தும் அணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது வெளிநாட்டில் இருந்து விளையாட செல்லும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன்காரணமாக கிரிக்கெட் போட்டிகளின் போது டாஸ் போடும் முறையை நீக்க ஐசிசி திட்டமிட்டு வருகிறது. இது குறித்து, வரும் 28, 29ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close