ஐ.பி.எல் வர்ணனையாளராகும் இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா?!

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 04:28 pm


கிரிக்கெட் லெஜெண்ட் இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா ஐ.பி.எல் வர்ணனையாளராக களமிறங்க இருக்கிறார். 

முன்னாள் வெற்றி கேப்டன் சங்ககாரா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு பின் இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இலங்கைக்காக 500 போட்டிகளில் விளையாடியுள்ள சங்ககாரா, 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 26,000 ரன்களை அடித்துள்ளார். 

தற்போது 11-வது ஐ.பி.எல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான வர்ணனையாளராக சங்ககாராவை ஐ.பி.எல் நிர்வாகம் அணுகியுள்ளது. இந்தியாவுக்கு வந்திருக்கும் அவர், விரைவில் ஐ.பி.எல் போட்டிக்கான வர்ணனையாளர் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், இந்தியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் விளையாட இருக்கும் போட்டிக்கு, வர்ணனையாளராக பணிபுரிய சங்ககாரா ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனை குழுவுடன் இணைய இருக்கிறார். இதனால் அவர் ஐ.பி.எல் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்பது சந்தேகம் தான். 

ஓய்வு பெற்ற பிறகு, சங்ககாரா முதன்முதலில் வர்ணனையாளராக இருந்தது, கடந்த 2017ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close