இத்தாலி ஓபன்: அரையிறுதியில் நடால் - ஜோகோவிச் மோதல்

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 11:26 am


இத்தாலி ஓபன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்று போட்டியில் ரஃபேல் நடால் - நோவக் ஜோகோவிச் மோத உள்ளனர். 

ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீரர்கள் நடால் 4-6, 6-1, 6-2 என்ற கணக்கில் போக்னினியையும்; ஜோகோவிச் 2-6, 6-1, 6-3 என கெய் நிஷிகோரியையும் வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

இன்று நடக்கும் அரையிறுதியில் நடால் - ஜோகோவிச் மோத இருக்கின்றனர். மற்றொரு அரையிறுதியில் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் - மாரின் சிலிச் போட்டியிடுகின்றனர். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் கரோலின் கார்ஸியாவை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் மரியா ஷரபோவா, ஒஸ்டாபென்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். 

அரையிறுதிப் போட்டியில் இன்று ஹாலேப் - ஷரபோவா மோத உள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close