இது போதாது சி.எஸ்.கே இன்னும் மேம்பட வேண்டும்- தோனி

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 03:56 pm


சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கேப்டன் எம்.எஸ். தோனி கூறியுள்ளார்.  

ஐ.பி.எல்-ல் நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி 34 ரன் வித்தியாசத்தில் வலுவான சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி டெத் ஓவர்களில் மிகவும் தடுமாறியது. 

இந்த தோல்வி குறித்து தோனி கூறுகையில், "நம்மளுடைய பலத்தை மேலும் பலமாக்கி கொள்ளுங்கள். அதே நேரம் நம்மளுடைய பலவீனத்தையும் பலமாக்கி கொள்ள வேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் நாம் நம்மளுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வது முக்கியம்" என்றார். 

மேலும், "உடல்ரீதியாக தயாராவதை விட மனரீதியாக தயாராக வேண்டும். மற்றபடி நாங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறோம். டெத் ஓவர் பிரச்னையை மட்டும் சரி செய்துவிட்டால், சிறப்பாக இருக்கும். எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி இருக்கு. அதன் பின் தான் பிளே-ஆஃப். வரப்போகும் போட்டிகளில் பார்க்கலாம். நாங்கள் தவறுகளை சரி செய்ய முயற்சிப்போம்" என்று கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close