ஆப்கான்: கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 05:38 pm


ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

குறுகிய கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, ஐசிசி சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியை, ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாதில் ரமதான் பண்டிகை தொடங்கியதை கொண்டாடும் வகையில், கால்பந்து மைதானத்தில், உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆனால், மைதானத்தில் திடீரென குண்டுவெடித்ததில், பார்வையாளர்களில் 8 பேர் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஆப்கானிஸ்தான் பிரதமர் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close