ஹாக்கி இந்தியாவின் புதிய தலைவராக ராஜிந்தர் சிங் தேர்வு

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 05:30 pm


இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் புதிய தலைவராக ராஜிந்தர் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஹாக்கி இந்தியா சம்மேளனத்தின் தலைவராக இருந்த மரியம்மா கோஷி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், மூத்த துணை தலைவராக இருந்த ராஜிந்தர் சிங்க், தலைவராக இன்று முதல் பதவி ஏற்கிறார். ஹாக்கி இந்தியா மற்றும் ஹாக்கி ஜம்மு-காஷ்மீர் சம்மேளனத்துக்கும் பொருளாளராக பணிபுரிந்திருந்தார் ராஜிந்தர் சிங். 

சரவதேச ஹாக்கி சம்மேளனத்துக்கு தலைவராக அறிவிக்கப்பட்டதால், 2016ம் ஆண்டு நரிந்தர் பத்ரா, ஹாக்கி இந்தியாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநில அளவிலான ஹாக்கி வீரர் மரியம்மா கோஷி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close