பெங்களூரு அணியை வெளியேற்றிய ராஜஸ்தான் அணி!

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 07:36 am


ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப்போட்டியின் முடிவை அடுத்து, பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்க, ராஜஸ்தான் அணி அந்த வாய்ப்பில் நீடிக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர் முடிவுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 58 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 53 ரன்கள் எடுத்தார். ஷ்ராயாஸ் கோபால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தோல்வியை அடுத்து, இதுவரை பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வந்த பெங்களூர் அணி இத்தொடரில் இருந்து வெளியேறியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close