வாழ்வா? சாவா? கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 03:05 pm

ஐபிஎல் லீக் தொடரில் மிக முக்கியமான போட்டி இன்று மாலை 3 மணிக்கு நடக்க உள்ளது. மும்பை பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடக்கவிருக்கும் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. 

டெல்லி அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் வெறும் 4ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி எப்போதோ பிளேஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் அந்த அணி வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட முயற்சிப்பர். 

கடைசியாக இந்த அணி விளையாடிய சென்னைக்கு எதிரான போட்டியில் 162 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிறப்பாக பந்துவீச வெற்றி பெற்றது. அதே உத்வேகத்தோடு இன்றைய போட்டியில் அந்த அணி களமிறங்கும்.

கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் அவ்வளவு சுலபமாக இருந்துவிடவில்லை. மும்பை அணி இன்றைய போட்டியில் வென்றால் பிளேஆப் இல்லையென்றால் இது தான் கடைசி போட்டி என்னும் நிலையில் உள்ளது. தொடரின் தொடக்கத்தில் மும்பை அணி இந்த நிலையைக்கூட எட்டாது என்று சிலர் கருதினார். பின்னர் அந்த அணி வீரர்கள் நல்ல முன்னேற்றத்தை காட்டி வருகின்றனர்.

அதே போல இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 13 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் போலார்ட் மற்றும் குருனால் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தற்போது 4வது இடத்தில் 14 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி உள்ளது. ஆனால் மும்பையை விட அந்த குறைவான ரன் ரேட்டை கொண்டுள்ளது. 

இதுவரை இந்த அணிகள் 21 போட்டிகளில் மோதி உள்ளன. அதில் 10 ல் டெல்லியும், 11ல் மும்பையும் வென்றுள்ளது. 

வாய்ப்புகளை இழந்த இளம் வீரர்களை கொண்ட அணியும், வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று இருக்கும் அணியும் மோத உள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close