ஐபிஎல் 2018ல் கடைசி லீக் போட்டி: பஞ்சாப் அணியை பழிவாங்குமா சென்னை?

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 03:54 pm

இன்று புனே எம்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2018ன் கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிகின்றன. 

பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட சென்னை அணி இன்று எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடும். கடைசி போட்டியில் டெல்லி அணியிடம் சென்னை தோல்வியடைந்தது. எனவே இன்றைய போட்டியில் இழந்த நம்பிக்கையை திரும்ப பெற முயற்சிக்கும். மேலும் அட்டவணையில் இரண்டாவது இடத்தை நிரந்தரமாக்கவும் இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற வேண்டும்.

சென்னை அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவது அந்த அணிக்கு தலைவலியாக உள்ளது. எனவே பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதற்கு முன்பு தவறுகளை சரி செய்து கொள்ள சென்னை அணி முயற்சிக்கும். பந்து வீச்சில் டெத் ஓவர்களில் கலக்கி வந்த பிராவோ பந்துவீச்சை எதிரணிகள் துவம்சம் செய்ய துவங்கி விட்டனர். எனவே இன்றைய போட்டியில் அவர் மீண்டு வருகிறாரா அல்லது ஷர்துல் தாகூர் அந்த இடத்தை பிடிக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும். 

பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஆரஞ்ச் கேப் பெற்றவரும், பர்பிள் கேப் பெற்றவரும் அந்த அணி வீரர்கள் தான். ஆனால் இருவரது சிறப்பான ஆட்டம் மட்டும் அணியை முன்னேற்றி விடாது என்பதற்கு இந்த அணி நல்ல உதாரணம். இந்த தொடரின் தொடக்கத்தில் சிறந்த அணியாக திகழ்ந்த பஞ்சாப் நாட்கள் ஆக ஆக சரிய தொடங்கி விட்டது. கடைசியாக இந்த அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

டெல்லி அணியிடம் இன்று மும்பை தோல்வியடையும் பட்சத்தில் இன்று பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் அந்த அணி பிளேஆப் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு அந்த அணி பெரிய வெற்றியை பெற வேண்டும்.  

இதுவரை இந்த அணிகள் 18 போட்டிகளில் மோதி உள்ளன. அதில் 10ல் சென்னையும் 8ல் பஞ்சாப் அணியும் வென்றுள்ளது. 

இன்றைய போட்டியில் சென்னை வென்றால் மும்பையில் வரும் 22ந்தேதி நடக்கவிருக்கும் முதல் குவாலிபையர் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்க்கொள்ளும். தோல்வியடையும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் பட்டியலில் 3வது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டால் சென்னை அணி 23ந்தேதி நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் போட்டியிடும். 

முன்னதாக இந்த சீசனில் சென்னை அணி பஞ்சாபிடம் ஒரு போட்டியில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close