ஐபிஎல் வெற்றிகளுக்கு காரணம் சொல்லும் தோனி

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 08:29 am

சென்னை அணியில் ஒவ்வொரு சீசனிலும் மேட்ச் வின்னர்ஸ் இருப்பது தான் ஐபிஎல் போட்டியில் வெற்றிக்கு காரணம் என்று தோனி தெரிவித்துள்ளார். 

2018 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. புனேவில் நடந்த இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் தோனி பேசும்போது, ''பஞ்சாப் அணியின் பந்துவீச்சு மிக கடினமாக இருந்தது. அதுவும் அன்கித்தின் பந்துவீச்சின் போது பந்து அதிகமாக சுவிங்கானது. அப்போது அந்த அணியின் கேப்டன் அடுத்தடுத்து விக்கெட் எடுக்க வேண்டும் என்று தான் நினைப்பார். அதனால் தான் ஹர்பஜன் சிங் மற்றும் சாஹர் களமிறங்கினர். இது எதிரணிக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும். பந்து வீச்சாளர்கள் அவர்களது விக்கெட்டை எளிதாக எடுக்க நினைத்திருப்பார்கள். எப்போதும் விளையாடும் பேட்ஸ்மேன்கள் விளையாடினால், பந்துவீச்சாளர்கள் சரியான லைன் அன்ட் லென்ந்தில் வீசுவர். ஆனால் ஹர்பஜன் மற்றும் சாஹர் பேட்டிங்கின் போது அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரிந்திருக்காது. 

எங்கள் அணியின் உரிமையாளர்கள் புத்திசாலிகள். எங்கள் அணியில் இருக்கும் வீரர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியும். அவர்களுக்கு போட்டி குறித்த நல்ல புரிதல் உள்ளது. அது தான் கேப்டனாக எனது பங்கை எளிதாக்குகிறது. நல்ல அணி இல்லையென்றால் எல்லாம் கடினமான ஒன்றாகி விடும். எங்களிடம் உள்ள வீரர்கள் தான் வெற்றிக்கு காரணம். 

ஒவ்வொரு சீசனிலும் நாங்கள் சேர்க்கும் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். அஸ்வின், பொலிஞ்சர், மோஹிட் என மேட்ச் வின்னர்ஸ் அணியில் இருந்தனர். 

இந்த 2 ஆண்டுக்கு பிறகு வரும்போது, சில வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு பொறுந்தாமல் போயிருப்பர், வெறு ஒரு அணிக்கு விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். அதையெல்லாம் சமாளிக்க வேண்டும். 

கடந்த 10 ஆண்டு ஐபிஎல் குறித்து யோசிக்கும் போது, அதில் ஒவ்வொரு இறுதி சுற்றிலும் அணியாக செய்த தவறுகள் நினைத்து பார்க்கிறேன். 

இது போன்ற பார்மெட்களில் சில அதிரடி ஓவர்கள் மற்றும் ஒரு ரன் அவுட் கூட ஆட்டத்தை மாற்றிவிடும். எல்லாருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்'' என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close