வெற்றியை மகளுடன் கொண்டாடிய தோனி! வைரல் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 10:27 am

பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் தோனி தனது மகள் ஸிவாவுடன் விளையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஐபிஎல் 2018ன் கடைசி லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியடைந்தது. 

சென்னை அணி இந்த போட்டியில் பல புதிய சோதனைகளை செய்து வெற்றி கண்டது. போட்டியில் வெற்றி பெற்ற பின் தோனி தனது மகள் ஸிவாவோடு மைதானத்தில் விளையாடினார். 

பெரும்பாலும் சென்னை விளையாடும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது மகள் ஸிவாவோடு வந்து பார்ப்பார். அந்த வகையில் நேற்றும் அவர்கள் புனே மைதானத்தில் நடந்த போட்டியை பார்க்க வந்திருந்தனர். 

போட்டிக்கு பின் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது தோனியுடன் ஸிவா விளையாடி கொண்டு இருந்தார். தோப்பியை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடும் க்யூட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close