மும்பை அணி தோல்வியை கொண்டாடி மாட்டிக்கொண்ட ப்ரீத்தி ஜிந்தா

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 11:36 am

மும்பை அணி தோல்வியடைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ப்ரீத்தி ஜிந்தா கூறும் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

புனேவில் நேற்று பஞ்சாப் மற்றும் சென்னை அணிக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. வழக்கம் போல இந்த போட்டியை காண பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா வந்திருந்தார். 

அப்போது அவர் தனது அருகில் நின்றுக் கொண்டிருந்தவரிடம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ''மும்பை அணி இறுதிச்சுற்றுக்கு போகவில்லை.. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்'' என்று கூறியது போல இருந்துள்ளது. 

ப்ரீத்திக்கு கூட மும்பை அணியை பிடிக்கவில்லை என்று மற்ற அணி ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

நேற்று பஞ்சாப்-சென்னை அணிக்கு இடையேயான போட்டிக்கு முன் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அதில் மும்பை தோல்வியடைந்து பிளேஆப் வாய்ப்பை இழந்தது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close