ஐ.பி.எல்-ல் 4000 ரன் மைல்கல்லை எட்டினார் எம்.எஸ். தோனி

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 05:16 pm


ஐ.பி.எல் போட்டியில் நான்காயிரம் ரன் மைல்கல்லை எட்டிய 7-வது கிரிக்கெட் வீரரானார் எம்.எஸ். தோனி. 

இறுதி கட்டத்தை நெருங்கி வரும் 11-வது ஐ.பி.எல்-ல் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் சி.எஸ.கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பஞ்சாபை தொடரை விட்டு வெளியேற்றியது. இப்போட்டியில் சி.எஸ்.கே கேப்டன் தோனி 16 ரன் அடித்ததன் மூலம், ஐ.பி.எல் போட்டியில் 4000 ரன்களை எட்டினார். இதை எட்டும் ஏழாவது ஐ.பி.எல் வீரர் தோனி ஆவார்.

நான்காயிரம் ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (4,948) முதலிடத்தில் இருக்கிறார். சுரேஷ் ரெயினா (4,931) 2-வது; ரோஹித் சர்மா (4,493) 3-வது, கவுதம் கம்பிர் (4,217) 4-வது, ராபின் உத்தப்பா (4,124) 5-வது, டேவிட் வார்னர் (4,014) 6-வது, தோனி (4,007) 7-வது இடத்திலும் உள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close