இத்தாலி ஓபன் பட்டத்தை கைப்பற்றி, நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் நடால்!

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 12:01 pm


இத்தாலி ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரஃபேல் நடால். 

ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிச் சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 2ம் இடத்தில் இருக்கும் நடால், 3ம் இடத்தில் இருக்கும் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவை எதிர்கொண்டார். இதில் நடால் 6-1, 1-6, 6-3 என்ற கணக்கில் ஸ்வேரெவை வீழ்த்தி, 56-வது சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம், உலக டென்னிஸ் தரவரிசையில், நடால் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப்பை தோற்கடித்து, பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார். 

ஆண்கள் இரட்டையரில், கொலம்பியாவின் ராபர்ட் பாராஹ் - செபாஸ்டின் கேபள் இணையும்; பெண்கள் இரட்டையரில் டச் வீராங்கனை டெமி - ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி ஜோடியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close