இங்கிலாந்து டெஸ்ட்: உடல்தகுதியை நிரூபித்தார் பாகிஸ்தானின் முகமது அமிர்

  Newstm Desk   | Last Modified : 21 May, 2018 01:32 pm


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார் பாகிஸ்தானின் முகமது அமிர். 

டப்லினில், அயர்லாந்துக்கு எதிராக நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பணயம் மேற்கொண்டு வருகிறது. அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 24ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் அணியின் மிக முக்கிய வீரராக விளங்கும் அமிர், காயம் அடைந்தது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், காலில் ஏற்பட்ட காயம் குணமடைந்து முகமது அமிர் தனது உடல் தகுதியை நிரூபித்துவிட்டதாகவும், இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய அமிர், 5 ஆண்டுகள் தடை மற்றும் சிறை தண்டனை பெற்றார். தண்டனைக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் அமிர் சர்வதேச போட்டிகளில் மீண்டும்  களமிறங்கினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close