மகளுடன் சேர்ந்து நன்றி தெரிவித்த தோனி

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 01:28 pm

சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்த புனேவுக்கு தோனி தனது மகளுடன் இணைந்து நன்றி தெரிவிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடைசியாக ஞாயிறு அன்று புனே மைதானத்தில் நடந்த கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதின. இது தான் இந்தாண்டு புனேவில் நடக்கும் கடைசி ஐ.பி.எல் போட்டியாகும். புனே மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை அந்த போட்டியில் வெற்றி பெற்றது. 

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி ஒரு போட்டியை மட்டுமே தனது சொந்த மைதானத்தில் விளையாடியது. அதன் பின் ஏற்பட்ட எதிர்ப்புகளால் சென்னை அணி விளையாடும் போட்டிகள் புனே மைதானத்திற்கு மாற்றப்பட்டன. அங்கு நடக்கும் போட்டிகளுக்கு நீதிமன்றத்திடம் இருந்து முதலில் எதிர்ப்பு வந்த நிலையில் அதை எல்லாம் சரி செய்தது புனே மைதானத்தின் நிர்வாகம். 

அதன் பின் புனேவே இந்த ஆண்டு சென்னை அணியின் கோட்டையாக மாறியது. சொந்த மைதானத்தில் விளையாடுவது ஐபிஎல் தொடரில் நிச்சயமாக ஒரு அணிக்கு பெரும் பலமாக அமையும். சென்னை அணி அந்த பலத்தை இழந்து விட்டது என பலர் தெரிவித்தனர். 

ஆனால் சென்னை மைதனாத்தில் விளையாடினால் அந்த அணிக்கு கிடைக்கும் அதரவை போன்றே புனேவிலும் கிடைத்தது. இதுகுறித்து ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் தோனி நெகிழ்ந்து கூறி வந்தார். 

இந்நிலையில் கடைசியாக அங்கு நடந்த போட்டிக்கு பிறகு தோனி மைதான பராமரிப்பாளர்களுக்கு பரிசு வழங்கினார்.அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் தொகையையும், தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வழங்கினார். 

இதுகுறித்து பின்னர் தோனி கூறும் போது, '' இந்த பரிசு மைதான பராமரிப்பாளர்களின் சிறப்பான செயலுக்கு வழங்கப்பட்டது'' என்றார். 

இதனையடுத்து நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் தனது மகள் ஸிவாவோடு கைக்கோர்த்து டிரெஸிங் அறைக்கு அவர் செல்வது போன்ற காட்சி இருந்தது. 

இந்த வீடியோவோடு, ''இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கடைசியாக புனே டிரெஸிங் அறைக்கு செல்கிறேன். தற்போது ஸிவாவும் என்னுடன் உள்ளார். ஆதரவு கொடுத்த புனேவுக்கு நன்றி. மேலும் இந்த மைதானத்தையே நீங்கள் மஞ்சளாக மாற்றி விட்டீர்கள். உங்களை சென்னை அணி உற்சாகப்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்'' என பதிவிட்டு இருந்தார். தோனியின் கண் அசைவைக் கூட வைரலாக்கும் ரசிகர்கள் இதனையும் பரப்பி வருகின்றனர். 

தோனி ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு அவரது மகள் ஸிவாவுக்கான ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். அதிலும் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சென்னை விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண தோனியின் மனைவி சாக்‌ஷி மற்றும் ஸிவா வந்து விடுகின்றனர். பரபரப்பான போட்டிகளுக்கு இடையே ஸிவா பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்து கொண்டு செய்யும் சேட்டைகளும் கவனம் பெருகிறது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close