தோனிக்காக இருப்பதில் ஒரு சுயநலமும் இருக்கு! ஏன் தெரியுமா?- ஷேன் வாட்சன்

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 11:59 am


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார். 

ஐ.பி.எல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விளையாடி வந்த ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வாட்சன், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். துவக்க வீரராக களமிறங்கும் ஆல்-ரவுண்டர் வாட்சன், சி.எஸ்.கே-வுக்காக தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். ஓப்பனிங் பேட்ஸ்மேன் பொறுப்பை உணர்ந்து வாட்சன் நிலைத்து நின்று பல போட்டிகளில் வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். 

வாட்சன், முதன்முறையாக சி.எஸ்.கே அணிக்காக விளையாடுகிறார். அதுவும் முதல் முறையாக தோனியின் கேப்டன்ஷிப்புக்கு கீழ் களமிறங்கி விளையாடியது குறித்து மனம் திறந்து பேசினார். 

அவர் பேசுகையில், "சி.எஸ்.கே அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இந்த போட்டியின் முழுவதிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக என்னால் களமிறங்க முடியும். அதே சமயம், தோனிக்கு தேவைப்பட்டால் பந்துவீசவும் தயாராக இருக்கிறேன். 


தோனிக்காக நான் இருப்பேன். ஆனால் அதில் ஒரு சுயநலமும் இருக்கிறது. தோனியால் எப்படி ஒரு போட்டியை கணிக்க முடிகிறது. அவருடைய மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவரிடம் இதை பற்றியெல்லாம் நான் கேள்விகள் கேட்க சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.  

போட்டியின் போது அவரது உள்ளுணர்வு, உணர்ச்சியை பார்க்கும் போது, நம்பமுடியாத அளவுக்கு திறமையை கொண்டுள்ள வீரர்களுடன் நான் இணைந்து விளையாடிய அனுபம் தெரிகிறது. எம்.எஸ். தோனி அந்த இடத்தில் நிச்சயம் இருக்கிறார். ஒரு பந்துவீச்சாளர் என்ன செய்ய வேண்டும். பேட்ஸ்மேன் என்ன செய்ய போகிறார். அவர் எந்த இடத்தில் இறங்கி ஆடினால் சிறப்பாக இருக்கும் என்பதெல்லாம் அவர் சிறப்பாக கணிப்பார். அவர் சேஸ் செய்யும் போது, 10ல்/ 9 கச்சிதமாக இருக்கும்" என்று கூறினார். 

வாட்சன் இந்த சீசனில் 13 போட்டிகளில் 438 ரன் அடித்துள்ளார். சராசரி 33.69. ஸ்ட்ரைக் ரேட் 147.47.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close