ஐபிஎல் என்றால் என்ன தெரியுமா? சிஎஸ்கே ரசிகர்கள் சொல்லும் கதை

  Newstm Desk   | Last Modified : 23 May, 2018 09:01 am

ஐபிஎல் என்றால் என்ன என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கூறி வரும் கதை தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

இதுவரை சென்னை 9 தொடர்களில் விளையாடி 9 முறை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. மேலும் 7வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி சென்னை என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். சிலர் சென்னை பற்றி ஒரு கதையை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

சென்னை அணி விளையாடினால் அந்த அணியை சமாளிப்பதே மற்ற அணிகளுக்கு பெரும் சோதனையாக இருக்கிறது என்பதனை குறிக்கும் வகையில் ஒரு கதையை உருவாக்கி உள்ளனர். இது தான் தற்போது மீம்ஸ்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

''ஒரு நாள் ஒரு ஞானியிடம் ஒருவர் கேட்டார், ஐபிஎல் என்றால் என்ன? என்று. அதற்கு அந்த ஞானி, '7 அணிகள் சேர்ந்து இறுதிச்சுற்றில் சென்னை அணியை எதிர்கொள்ள போராடுவது தான் ஐபிஎல்' என்று கூறினார்'' என்பது தான் அந்த கதை. பலரையும் கவர்ந்த இந்த கதையை எதிரணிகளின் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close