விராட் கோலியை மீண்டும் முந்தினார் சுரேஷ் ரெய்னா

  Newstm Desk   | Last Modified : 23 May, 2018 12:31 pm


ஐ.பி.எல்-ல் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா மீண்டும் முதலிடத்தை பிடித்தார். 

11-வது ஐ.பி.எல் போட்டியின் முதல் தகுதிச் சுற்று போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. போட்டியில் சென்னை அணி தோல்வியின் விளிம்பிற்கு சென்று பின், பாப் டு பிளேஸிஸின் மேஜிக் மூலம் ஹைதராபாதை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த போட்டியில் சி.எஸ்.கே அணிக்காக சுரேஷ் ரெய்னா 22 ரன் எடுத்தார். இதன் மூலம், ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ரெய்னா. இந்த சீசனில் ரெய்னா 14 போட்டிகளில் 413 ரன் விளாசி, 400 என்ற மைல்கல்லை கடந்தார்.   175 போட்டிகளில் ரெய்னா 4,953 ரன் அடித்துள்ளார். விராட், 163 போட்டிகளில் 4,948 ரன் அடித்திருக்கிறார். 

ரோஹித் சர்மா 173 இன்னிங்ஸ்களில் 4,493 ரன் அடித்து மூன்றாவது இடத்திலும், கவுதம் கம்பிர் 154 மேட்ச்களில் 4,217 ரன்களுடன் நான்காவது இடத்திலும், ராபின் உத்தப்பா 163 போட்டிகளில் 4,081 ரன் சேர்த்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close