ஐ.பி.எல்: ஆரஞ்சு தொப்பியை மீட்டார் கேன் வில்லியம்சன்

  Newstm Desk   | Last Modified : 23 May, 2018 01:01 pm


11-வது ஐ.பி.எல் போட்டியின் முதல் தகுதிச் சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றியை நோக்கிச் சென்றது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற பாப் டு பிளேஸிஸ் முக்கிய பங்காற்றினார். 

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 24 ரன் அடித்ததன் மூலம், இந்த சீசனில் அதிக ரன் விளாசிய பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். 15 போட்டிகளில் வில்லியம்சன் 685 ரன் அடித்துள்ளார். ஒரு ரன் இடைவெளியால் பன்ட் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் ஆரஞ்சு தொப்பியை வில்லியம்சன் கைப்பற்றினார்.

ரிஷாப் பன்ட் 684 ரன்களுடன் 2-வது இடத்தையும், கே.எல். ராகுல் 659 ரன்களுடன் 3-வது, அம்பதி ராயுடு 586 ரன்னுடன் 4-வது, ஜோஸ் பட்லர் 548 ரன்னுடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஆண்ட்ரியூ டியே 24 விக்கெட்களுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறார். உமேஷ் யாதவ் (20 விக்கெட்) 2-வது, சித்தார்த் தாகூர் (19 விக்கெட்) 3-வது, ஹர்திக் பாண்டியா (18 விக்கெட்) 4-வது, ரஷீத் கான் (18 விக்கெட்) 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close