தப்பி பிழைத்த டுபிளேசிஸ்... தனியாளாக போராடிய கதை!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2018 04:15 pm

மும்பையில் நேற்று நடந்த போட்டியில் 15வது ஓவரில் டு பிளேசிஸியின் விக்கெட் தப்பி பிழைத்தது. அதன் பின் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி அடைய செய்தார். 

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான முதல் பிளே ஆஃப் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. அதில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சில் கலக்கிய சென்னை அணி பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. 

ஆனால் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டு பிளேசிஸ் கடைசி வரை களத்தில் இருந்து அணியை காப்பாற்றினார். இந்தாண்டு ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடந்தபோது டு பிளேசிஸை சென்னை அணி வாங்கியதை பலரும் விமர்சனம் செய்தனர். அவர் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. அதன் பின் களமிறங்கிய போட்டிகளிலும் அவர் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே அவரை ஒவ்வொரு முறை பிளேயிங் 11ல் சேர்த்தபோதும் சென்னை அணியின் கேப்டன் தோனி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார். 

ஆனால் அந்த விமர்சனத்திற்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் நேற்றைய போட்டியில் டுபிளேசிஸ் விளையாடி காட்டினார். 

சென்னை அணி விளையாடிய போது, 15வது ஓவரை ரஷித்கான் வீசினார். அப்போது முதல் பந்தில் டு பிளேசிஸ் எல்.பி.டபள்யூ  முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார். ஆனால் டுபிளேசிஸ் ரிவியூவ் கேட்டார். பெரிய திரையில் பந்து லெக் ஸ்டிக்கில் மிஸ் ஆனது. அதன் பின் மீண்டும் விளையாட தொடங்கினார். அதன் பின்னும் நிதானமாக ஒரு பக்கம் டுபிளேசிஸ் விளையாடி கொண்டு இருக்க மற்றொரு பக்கம் விக்கெட்களை இழந்து கொண்டு இருந்தது சென்னை அணி.

ராகுல் திராவிட் போல 8வது விக்கெட் போகும் வரை களத்தில் இருந்து டுபிளேசிஸ் விளையாடினார். அதன் பின் களமிறங்கிய தாகூர் சிக்சர்கள் பறக்கவிட்டு அசத்தினர். பின்னர் 19வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர்  அடித்து அணியை வெற்றி பெற செய்தார் டு பிளேசிஸ். 

போட்டிக்கு பின் பேசிய தோனி, ''இது போன்ற ஆட்டங்களில் தான் அனுபவம் உதவும். எப்போதும் உடலை விட மூளைக்கு ஓய்வு கொடுப்பது முக்கியம் என்பதில் நான் உறுதியாக இருப்பேன். அதனால் தான் டு பிளேசிஸ் சில போட்டிகளில் விளையாடவில்லை. அவர் பிரமாதமாக விளையாடினார். இதே போன்ற ஆட்டத்தை இறுதி போட்டியில் காட்டுவார் என்று நம்புகிறேன் என்றார். 

ஆட்டநாயகன் விருது பெற்ற டுபிளேசிஸ் பேசும்போது, ''அணியின் வெற்றிக்கு பங்களிப்பது மகிழ்ச்சியான ஒன்று. இந்த மைதானத்தில் விளையாடுவது எப்போதும் உற்சாகத்தை தரும் . அதனால் நம்பிக்கையாக விளையாடினேன். போட்டியின் இறுதியில் கட்டம் எங்களுக்கு சாதகமாக மாறியது. ரஷித் கான் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமாக இருந்தது'' என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close