தோனிக்காக நடனமாடி வெற்றியை கொண்டாடிய டிஜே பிராவோ!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2018 03:10 pm


ஐ.பி.எல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சி.எஸ்.கே அணி கேப்டன் தோனிக்கு, பிராவோ செலுத்திய சமர்ப்பணம் வைரலாகி வருகின்றது. 

2018 ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஹைதராபாத் நிர்ணயித்த 140 ரன் இலக்கை, டு பிளேஸிஸ் உதவியால் சென்னை அணி எட்டியது. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள சி.எஸ்.கே அணிக்கு இது மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது. 


இந்த வெற்றியை வீரர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் கொண்டாடி மகிழ்ந்தனர். அதில், டிஜே பிராவோ, பாட்டு பாடி, நடனமாடி வெற்றியை கொண்டாடிய வீடியோ ஒன்று பரவி வருகின்றது. அந்த வீடியோவில், எம்.எஸ். தோனி முன்பு நின்று பிராவோ, பாட்டு பாடிக் கொண்டு ஹர்பஜன் சிங்குடன் நடனமாடினார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கேப்டன் தோனி, இந்த சீசனில் 15 போட்டிகளில் 455 ரன் அடித்துள்ளார். சராசரி 75.83.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close