சினிமாவாகிறது முன்னாள் கேப்டன் கங்குலி வாழ்க்கை!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2018 07:43 pm


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை சினிமா படமாக வெளிவரவுள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை, சினிமா படமாக வெளிவந்து மக்களிடையே வரவேற்பை பெற்று நல்ல வசூலும் கிடைத்தது. இந்த வரிசையில் தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியின் வாழ்க்கையும் படமாக தயாராக உள்ளது. இப்படத்தை பிரபல இந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிக்க உள்ளார். படம் தொடர்பாக கங்குலியை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கங்குலி எழுதிய “எ செஞ்சுரி இஸ் நாட் எனப்” என்ற சுயசரிதை புத்தகத்தை தழுவி இப்படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து கங்குலி கூறுகையில், “படம் தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை  ஏக்தா கபூருடன் நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விவரங்களை விரைவில் தெரிவிப்பேன்” என கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close