விக்கெட் போச்சா? ஐசிசியை நாடிய பாக். தெருவோர கிரிக்கெட்டர்

  Newstm Desk   | Last Modified : 24 May, 2018 10:34 am

பாகிஸ்தானில் நடந்த தெருவோர கிரிக்கெட்டு போட்டிக்கு நடுவராக மாறியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.  

பாகிஸ்தானின் வீதிகளில் சிலர்  கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அங்கு காற்று பலமாக வீசியது. இந்நிலையில் பவுலர் பந்துவீச, அதை பேட்ஸ்மேன் அடித்துள்ளார். ஆனால் எதிர்திசையில் காற்று பலமாக வீச பந்து திரும்பி நேராக ஸ்டெம்பில் பட்டது. 

இதை அங்கிருந்த ஹம்சா என்பவர் வீடியோவாக எடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது அவுட்டா? இல்லை நாட் அவுட்டா? என கேள்வி கேட்டுள்ளார்.

இதைப்பார்த்த ஐசிசி., அந்த பேட்ஸ்மேன் கிரிக்கெட் விதி எண் 32.1ன் படி அவுட் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close