11 விக்கெட்களை மட்டுமே எடுத்த ரூ.11 கோடி வீரர்

  Newstm Desk   | Last Modified : 24 May, 2018 10:53 pm

ஐபிஎல் 2018ல் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட உனத்கட் இந்தாண்டு 11 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். 

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஜெயதேவ் உனத்கட். அப்போது ''என்னை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுப்பார்கள் என்று நினைக்கவே இல்லை'' என்று அவர் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து ஐபிஎல் 2018க்கான போட்டிகள் தொடங்கின. அனைவரும் உனத்கட்டின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் முதல் போட்டியில் இருந்து இந்திய அணிக்காக ஆடியதை விடவும் சுமரான ஆட்டத்தையே வெளிப்படுத்தனார். இவர் நேற்று வரை 15 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை மட்டுமே இழந்துள்ளார். பெரிதாக பேட்ஸ்மேன்களை கூட அவர் கட்டுப்படுத்தவில்லை.

நேற்று எலிமினேட்டர் சுற்றின் முதல் போட்டி நடந்தது. இதில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று எலிமினேட்டர் சுற்றின் 2வது போட்டிக்கு முன்னேறியது. 

இந்த போட்டியில், ஒரு ஓவருக்கு சராசரி 16.50 ரன்கள் வாரிவழங்கினார் உனத்கட். இவர் 2 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுகொடுத்தது நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவர் பவுலிங்கில் 44.18 என்ற மோசமான சராசரி வைத்துள்ளார். 

இதேபோல ராஜஸ்தான் அணி பென் ஸ்டோக்சை அதிக விலைக்கு ஏலம் எடுத்தது. ஆனால் அவரும்  பெரிதாக சோபிக்கவில்லை. அந்த அணியில் கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானேவுக்கு ரூ. 4 கோடி வழங்கப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close