ரசிகர்களே என்னை மன்னித்துவிடுங்கள்- விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 24 May, 2018 09:45 pm


ஐபிஎல் போட்டியில் சொதப்பியதால் சிறப்பாக விளையாட முடியாமல் வெளியேறியதற்காக விராட்கோலி தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 11 சீசனில் ஆரம்பத்திலிருந்தே சொதப்பியதால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போட்டியில் இருந்து வெளியேறியது. 14 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தது.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விராட்கோலி வீடியோ வெளியிட்டுள்ள வீடியோவில், 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் எங்களால் நினைத்த அளவுக்கு சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த சீசன் மிகச் சிறப்பாகச் சென்றது என்று கூறும் அளவுக்கு நாங்கள் பெருமைப்படவில்லை. நாங்கள் விளையாடிய விதத்தை எண்ணி மிகவும் காயப்பட்டுள்ளேன். ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறேன். ரசிகர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் கிடைத்துவிடாது. அடுத்த சீசனில் அனைத்தும் மாறும் என நம்புகிறேன். இன்னும் நிறைய பயிற்சிகளோடு அடுத்தப்போட்டியை எதிர்கொள்வோம்” என கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close