ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்கிறார் ரொனால்டினோ

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 02:39 pm

பிரபல பிரேசில் கால்பந்து விரர் ரெனால்டினோ ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். 

பிரேசில் கால்பந்து அணிக்காக விளையாடியவர் உலகப் புகழ்பெற்ற ரொனால்டினோ. 38 வயதாகும் ரொனால்டினோ, பிரேசில் அணிக்காக 97 சர்வதேசப் போட்டிகளில் 33 கோல்களை அடித்துள்ளார். இரண்டு முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 2002ல் பிரேசில் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். பிபாவின் மிகச் சிறந்த வீரர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். புகழ்பெற்ற ஜெர்மியோ, பிஎஸ்ஜி, பார்சிலோனா கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கிளப் அணிகளுக்காக 441 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டினோ, 167 கோல்களையும் அடித்துள்ளார்.

இவர் தற்போது தனது திருமணம் குறித்து அறிவித்துள்ளார். தனது நீண்ட நாள் காதலிகளான பிரிசிலா கோயல்ஹோ மற்றும் பீட்ரிஸ் சௌசா ஆகியயோரை ஒரே நாளில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சௌசாவுடன் 2016ல் இருந்து பழகி வருகிறார். அதற்கு முன்பே ரொனால்டோவுடன் நட்பில் இருந்தவர் கோயல்ஹோ.

கடந்தாண்டு ஜனவரியில், தன்னுடைய காதலை இருவரிடம் ரொனால்டினோ கூறி மோதிரம் மாற்றிக் கொண்டார். இதைத் தொடர்ந்து தலைநகர் ரியோடிஜெனிரோவில் உள்ள ரொனால்டினோ வீட்டில் அவரது இரண்டு காதலிகளும் கடந்த டிசம்பர் மாதம் குடியேறினர்.

இவர்களில் யாரை அவர் முதலில் திருமணம் செய்வார் என்று பட்டிமன்றம் நடந்து வந்தது. ஆனால் இருவரையுமே அவர் திருமணம் செய்யப் போவதாக அறிவித்து பட்டிமன்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரொனால்டினோ. திருமணத்துக்காக இருவருக்கும் ஒரே மாதிரியான பரிசுப் பொருட்களை ரொனால்டினோ வாங்கி குவித்து வருகிறாராம். திருமணத்துக்கு மிக நெருங்கியவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்க உள்ளாராம் ரொனால்டினோ.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close