உலக கோப்பை வில்வித்தை: துவக்க போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 26 May, 2018 12:44 pm


துருக்கியில் உள்ள அன்டால்யா நகரத்தில் உலக கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் துவக்க நாளான நேற்று இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று பதக்க கணக்கை துவக்கியது. 

பெண்கள் காம்பவுண்ட் குழு பிரிவு போட்டியில், இந்தியா சார்பில் இடம் பெற்றிருந்த ஜோதி சுரேகா வெண்ணம், முஸ்கன் கிறார், திவ்யா தயா ஆகியோர் சீன தைபே எதிரணியினரிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை பெற்றது. 

பின்னர் கலப்பு பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி, பெல்ஜியன் கலப்பு இணையிடம் மோதி வெண்கலம் பெற்றது. 

தீபிகா குமாரி, ப்ரோமிலா டைமறி, அங்கிதா பாகா ஆகியோர் அடங்கிய பெண்கள் ரிகர்வ் அணி, சீன தைபேவின் ரிகர்வ் அணியை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோத உள்ளன. ஆண்கள் ரிகர்வ் அணி, துவக்க போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close