ஐ.பி.எல் பர்பிள் தொப்பி: ஆண்ட்ரியூவை நெருங்கும ரஷீத்

  Newstm Desk   | Last Modified : 26 May, 2018 03:18 pm


ஐ.பி.எல் இறுதிச் சுற்று போட்டிக்கு கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் முன்னேறியது. நாளை (27ம் தேதி) நடக்கும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஹைதராபாத் மோதுகிறது. ஐ.பி.எல்-ல் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் கேன் வில்லியம்சன், இந்த சீசனில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 16 போட்டிகளில் விளையாடி 688 ரன்களுடன், ஆரஞ்சு தொப்பியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 

ரிஷப் பன்ட் 684 ரன்களுடன் (14 போட்டி) இரண்டாவது, கே.எல். ராகுல் 659 ரன்களுடன் (14 போட்டி) 3-வது, அம்பதி ராயுடு 586 ரன்களுடன் (15 போட்டி) 4-வது, ஜோஸ் பட்லர் 548 ரன்களுடன் (13 போட்டி) 5-வது இடத்திலும் உள்ளனர். 

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில், ரஷீத் கான் முதலிடம் பிடிக்க இன்னும் 3 விக்கெட்கள் மட்டுமே தேவையாக உள்ளது. 21 விக்கெட்களுடன் ரஷீத் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் 24 விக்கெட்களுடன் ஆண்ட்ரியூ டியே நீடிக்கிறார். சித்தார்த் கவுல் (21 விக்கெட்) 3-வது, உமேஷ் யாதவ் (20 விக்கெட்) 4-வது, ட்ரெண்ட் பௌல்ட (18 விக்கெட்) 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close