வெ.இ சுற்றுப்பயணம்: தந்தை காலமானதால் பின்வாங்கிய இலங்கை வீரர்

  Newstm Desk   | Last Modified : 26 May, 2018 04:37 pm


வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த இலங்கை பேட்ஸ்மேன் தனஞ்ஜய, தந்தை காலமானதால் அதில் இருந்து பின்வாங்கினார்.

தனஞ்ஜயவின் தந்தை ராஜன். உள்ளூர் அரசியல்வாதியான அவர் கொழும்புவில் நடந்த துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தார். இவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டது. நேற்று (25ம் தேதி) வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தனஞ்ஜய சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்து தனஞ்ஜய விலகினார். 

வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஜூன் 6ம் தேதி முதல் தொடங்குகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close