ஐ.பி.எல்: ரஷீத் கானை வாழ்த்திய தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு

  Newstm Desk   | Last Modified : 26 May, 2018 05:05 pm


11-வது ஐ.பி.எல் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. போட்டிக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்த வண்ணம்  உள்ளனர். நாளை (27ம் தேதி) இறுதி போட்டி நடக்க இருக்கும் நிலையில், போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. 

இந்த நிலையில், இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள்ள ஹைதராபாத் அணிக்கு தெலுங்கு பட உலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதிலும் நேற்றைய போட்டியில் ஜொலித்த ரஷீத், மகேஷ் உள்பட அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தது மறக்க முடியாதது.

மகேஷ்பாபு தனது ட்விட்டரில், "ரஷீத் கானுக்கு தலைவணங்குவோம். சன்ரைசர்ஸ் ஹைதராபாதிடம் இருந்து இப்படியான ஒரு ஆட்டம். இறுதி போட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஹைதராபாத் அணிக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மகேஷ்பாபுவின் ட்வீட்டுக்கு, "நன்றி சகோதரா.. உங்கள் படங்களை முனைப்போடு பார்க்கிறேன்" என்று ரஷீத் கான் பதிலளித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close