ஐ.பி.எல்: விக்கெட்டில் வெளிநாட்டு வீரராக ரஷீத் கான் முறியடித்த சாதனை!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2018 05:23 pm


ஐ.பி.எல் போட்டியின் துவக்கம் முதலே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான். இவர் நேற்றைய நாக்-அவுட் சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்த முக்கிய பங்களித்தார்.

ஹைதராபாத் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேற முக்கிய காரணம் ரஷீத் கான் என்றே சொல்லலாம். 4 ஓவரில் 19 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய அவர், 10 பந்தில் 34 ரன்களை பறக்கவிட்டு, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் 21 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் ரஷீத். இதன் மூலம், ஐ.பி.எல்-ல் வெளிநாட்டு லெக்-ஸ்பின்னர்களில் அதிக விக்கெட் எடுத்த ஷேன் வார்னேவை, ரஷீத் முறியடித்தார். ஐ.பி.எல் அறிமுகமான 2008ம் ஆண்டு சீசனில்,  லெக்-ஸ்பின்னர்  வார்னே 19 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

ரஷீத் கானின் இந்த சிறந்த ஆட்டம் இறுதிச் சுற்றிலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதும் இறுதிச் சுற்று போட்டி நாளை மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close