இணையத்தில் அதிகம் பேரால் தேடப்பட்ட ‘ஐபிஎல்’

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 02:24 pm

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இணையத்தில் அதிகம் பேரால் தேடப்பட்ட வார்த்தை ஐபிஎல் தான் என்று தெரியவந்துள்ளது.

உலகமே கொண்டாடும் கிரிக்கெட் திருவிழாவாக ஐபிஎல் மாறி உள்ளது. உலகின் சிறந்த பிளேயர்கள் விளையாடும் இந்த டி20 தொடருக்கு பல சர்ச்சைகளையும் கடந்து தொடர்ந்து மவுசு கூடிக்கொண்டே செல்கிறது. 11வது ஆண்டு ஐபிஎல் தொடரில் இன்னும் பெரிய மைல்கல்லை எட்டிஉள்ளது.

ஏப்ரல் 2018ல் மட்டும் 1.8 மில்லியன் முறை ஐபிஎல் என்ற வார்த்தை இணையத்தில் தேடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 823,000 பேரால் தேடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. SEMrush, a Search Engine Optimisation (SEO)என்னும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. 192 மில்லியன் இணைய பயனாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு கிடைத்துள்ளது. 'ஐபிஎல்' சொல்லுக்கும் கீவேர்டாக 22,520,000 வார்த்தைகள் இருக்கின்றதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close