எங்களுக்காக சென்னை ரசிகர்கள் காத்திருந்தனர்: தோனி

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 02:16 pm

சென்னை சூப்பர் கிங்ஸ் நன்றாக விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர் என தோனி தெரிவித்துள்ளார். 

மும்பையில் இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், சென்னை மற்றும் ஹைதராபாத் அணியின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது தோனி பேசும் போது, "இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை விளையாடியது. தொடருக்கு முன்பு அதை நினைத்து உணர்ச்சிவசப்படுவேன். ஆனால் போட்டி தொடங்கிய பிறகு கிரிக்கெட்டில் மட்டும் தான் கவனம் இருக்க வேண்டும். சென்னையில் விளையாட முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனால் அங்கு ஒரு போட்டியாவது விளையாடி இருக்கிறோம் என்பதில் நிம்மதி. ஏனேனில் எங்களுக்காக ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக காத்திருந்தனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் இல்லை என்றாலும் எங்கள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருந்தனர். நாங்கள் களத்தில் இறங்கி சிறப்பாக விளையாடுவதை பார்க்க அத்தனை பேரும் ஆவலுடன் இருந்தனர். 

இறுதிப்போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் பிளேமிங்கிடம் தான் உள்ளது. அவர் கூறுவதை நான் செய்கிறேன் என்றார். 

ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேசுகையில், ''கேப்டன் பொறுப்பு திடீரென்று வந்தது. இந்த தொடர் சிறப்பான அனுபவம். என்னை பற்றி நானே நிறைய தெரிந்து கொண்டேன்' என்று கூறினார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close