குழந்தைகளுடன் வெற்றியை கொண்டாடிய சிஎஸ்கே 'டாடி'கள்

Last Modified : 28 May, 2018 09:55 am

தந்தைகளின் ஆர்மி என்று கேளி செய்யப்பட்ட சென்னை அணி வீரர்கள் வெற்றியை தங்களது குழந்தைகளுடன் கொண்டாடினர். 

சென்னை அணி நேற்றைய இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் வயதில் மூத்தவர்கள் அதிகம் இருக்கும் அணி என பலரால் கிண்டல் செய்யப்பட்ட சென்னை அவர்களுக்கு தனது வெற்றியின் மூலம் பதிலளித்து உள்ளது. 

சென்னை அணி வீரர்கள் நேற்று கோப்பை வென்றதை தங்களது குழந்தைகளுடன் கொண்டாடினர். 

சென்னை கேப்டன் தோனி கேப்பையை சக வீரர்களிடம் கொடுத்துவிட்டு வழக்கம் போல பின்னாள் போய் நின்றுக்கொண்டார். அப்போது அவரிடம் ஓடிவந்த ஸிவாவை தூக்கி சுற்றினார். ஸிவா உணவு சாப்பிடுவதைக்கூட வைரலாக்கும் நம்மக்கள் இதை விட்டுவைப்பார்களா?.. இதுதான் தற்போது நெட்டில் ஹிட் அடித்துள்ளது. 

அதே போல சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், முரளி விஜய், இம்ரான் தாஹிர் ஆகியோரும் தங்களது குழந்தைகளுடன் வெற்றியை கொண்டினார். 

அந்த அழகான தருணங்களை சென்னை ரசிகர்கள் இது பலவீனம் அல்ல பலம் என்று பகிர்ந்து வருகின்றனர். 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close